3/23/08

என் கவிதைகள்...

*

இன்னும் ஈரம் குலையாத
வண்ணத் தூரிகையில்
இருந்து
சொட்டிக்கொண்டே இருக்கின்றன...
வரையப் படாத என் ஓவியங்கள்...

*

அறியப் படாத பின்னிரவுகஆளில்
வெளிர் நீலமாய் கசியும்
என் கனவுகளை மிரட்டி
துரத்துகின்றன தெரு
நாய்களின் ஓலங்கள்...

*

விடியலின் பிளிறலில்
மிரண்டு ஓடும்
விட்டில்கள்.....

*

நீ விசி எறிந்த
எனக்கான
ப்ரத்யோக பார்வையை
உலர்ந்த சருகுகளிடயே
சப்தமிடாமல் நான் தேடிய
அந்த மஞ்சள் மாலைப்
பொழுதில்........
என்னைக் கடந்து எத்தனை
பட்டாம்பூச்சிகள் பறந்து
சென்றன என்பதற்கான
கணக்கில் நினைவில்
நின்றவை தவிர
மறந்துப் போன
சில உதிரிகளைக் குறித்து
எனது பெரும் கவலை
இருந்தது என்பது பற்றி
நீ ஏதும் அறிவாயா..?

*

ஆங்காங்கே இடப்பட்ட
புள்ளிகளில் யூகிக்க
முடியாமல் திணறுகிறேன்
ஒரு அழகிய கோலாத்தை....

*

**********************************************************************************

பிரிவிற்கான மொழி...
-------------------

மிக நெருங்கிய தருணத்தில்
ஒரு வியர்வைத்துளியின்
இடைவெளியில் மெல்ல
விலகி விட்டோம் நாம்....

எதிரெதிர் திசைகளில்
நகரும் ரயில் பெட்டிகளில்
எது நகருகிறது....?

நிகழ்தகவுகளாய் வர்ணம்
மாறிய மனதின் மெளனத்தை
பேச முடியுமா உன்னால்...?

இயல்பு மீறிய ஒரு
சலனத்திற்காக
இருவருமே அமைதியாய்
காத்திருக்கிறோம்....

பிரிவுகளின் உலர்ந்த
காரணங்களுக்கான
பிரத்யோக மொழிகளை
சொல்வதற்கு உதடுகள்
தங்களை ஈரப் படுத்திக்
கொள்கின்றன...

ஏதாவது ஒரு உடைபடாத
நொடியில் உடையலாம்
நம் பிரிவிற்கான
உறவு....

நீண்ட மெளனங்களின்
கருத்த வராண்டாக்களில்
தளர்ந்து நடக்கிறது....
நம்மை மீறி கொப்புளிக்க
துடித்த நம் முதல்
துளிர்த்தலுக்கான நினைவு....

மிடறு விழுங்கினாலும்
மீறி வர எத்தனிக்கும்
நம் அரிதாரத்தை காட்டும்
அளவுக்கு மீறிய ஓப்பனை...

நொடிகள் கடந்தாலும்
நம்மை கடக்காமல்
நிற்கிறது இந்த
இமைக்காத பொழுது....

சில பெருமூச்செறிதல்களுக்கு
பிறகு...

சின்னப் புன்னகையோடும்
மென்மை கைக் குலுக்கலோடும்
துவங்கிறது...

நம் பிரிவிற்கான மொழி.

**********************************************************************************

சொல்லின் சொல்....
------------------

நம் உரையாடலில்
ஒரு கண உமிழலில்
பிறப்பெடுக்கப் போகும்
எனது அடுத்த சொல்
விசேடமானது....

நான் உதிர்க்கும் இறுதி
சொல்லாக அது இருக்கலாம்...
அல்லது நீங்கள் கேட்கும்
கடைசிச் சொல்லாக கூட
இது அமையலாம்....

ஏற்கனவே நான்
காற்றில் விதைத்துப் போன
சொற்களின் தொடர்வாய்
இது நிகழலாம்...

ஒரு கண உமிழலில்
காலங் காலமாய் கட்டி
வைக்கப் பட்டிருந்த
கோட்டைக் கொத்தளங்களை
சரிக்கும் உளியாக கூட இது
இருக்க்கலாம்..

ஆதிக்கத்திற்கு எதிரான தோட்டாவாக
அது வெடிக்கலாம்...

அல்லது

மெளனமாய் இறந்தவனின்
கல்லறையில் ஒரு
உதிரிப் பூவாகக் கூட
அது கிடக்கலாம்....

ஆனால் அந்த சொல்லின்
கரைசலின் மீதத்தில்
நான் இருப்பேன் என்பதை
இப்போதைக்கு
உறுதியாய் சொல்ல முடியும்.

நாய்வால் திரைப்பட இயக்கம்-சாத்தியப் பட்ட கனவு.

தோழர்களே.....

வணிக மயமாக மாறிப்போன நம் நாட்டின் திரைப்படத் துறையை மீட்டு எடுக்க வேண்டிய சூழலில் மாற்றுச் சிந்தனைகளை, திரைப்படங்கள் குறித்த நேர்மறையான எண்ணங்களை சமூகத் தளத்தில் உண்டாக்க திரைப்பட இயக்கங்களின் இயக்கம் நாளது தேதியில் அவசியமாக உள்ளது.

உலக சினிமாக்கள் நம் வீட்டின் வரவேற்பறையிலேயே இடம் பிடிக்க துவங்கி விட்ட இந்த சூழலில் திரைப்படம் என்ற அரிய பொருளை வெறும் பொழுதுபோக்கிற்கானது என்று உணரும் அபாயமும் இப்போது ஏற்பட்டுள்ளது..
மக்களை அசலாக பிரதிபலிக்கக் கூடிய திரைப் படங்களை காணுவதும்,அவை குறித்த எதிர்வினைகளை சமூகத் தளத்தில் ஆரோக்கிய சூழலில் ஏற்படுத்திட திரைப்பட இயக்கம் என்ற குழுவின் செயல்பாடு அவசியமானது.

குறும்படங்கள் ,மாற்று சிந்தனைகள் மற்றும் விளிம்பு நிலை மனிதர்களை பற்றி படைப்பிற்கு துரோகம் இழைக்காமல் சித்தரிக்கின்ற படங்கள் ஆகியவைகளை முன்னிறுத்த வேண்டிய கடமையும் நமக்கு உள்ளது.ஏதோ ஒரு வகையில் உண்மையான திரைமொழியை நிகழ்த்தத் துடிக்கும் படைப்பாளிகளை கெளரவப் படுத்துவதும் இதில் அடங்கும்.

இதைத் தான் என் தோழர்கள் கோவையில் நாய்வால் திரைப்பட இயக்கம் மூலம் செய்துக் கொண்டு இருக்கிறார்கள்.

கோவையில் செயல்பட்டு வரும் நாய்வால் திரைப்பட இயக்கம் மாற்றுப் படங்கள் மற்றும் குறும் படங்கள் ஆகியவை குறித்தான விழிப்புணர்வை ஏற்படுத்தி வருவதோடு மட்டுமில்லாமல் அவற்றை சார்ந்து இயங்கும் படைப்பாளிகளை முன்னிலைப் படுத்தியும் வருகிறது....அத்தி பூத்தாற் போல் நல்ல திரைமொழியை உள்ளடக்கமாக கொண்டுவரும் திரைப்படங்கள் குறித்த ஆரோக்கியமான விமர்சனங்களை முன் வைத்து,அதன் படைப்பாளிகளை பாராட்டி வரும் நாய்வால் திரைப்பட இயக்கத்தின் பணி மகத்துவமானது.

தோழர்கள் ஜெயக்குமார், அன்பே மயில்வாணன் மற்றும் தோழர்கள் நடத்தி வரும் நாய்வால் திரைப் பட இயக்கம் நாளை கோவையில் நடிகவேள் எம்.ஆர் ராதா அவர்களுக்கு நூற்றாண்டு விழா கொண்டாட உள்ளது...நடிகர் சத்யராஜ்..,எழுத்தாளர் மணா மற்றும் பலர் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர்.தோழர்கள் ஜெயக்குமார், அன்பே மயில் வாணன் ஆகியோர் தன் தெளிந்த சிந்தனைத் திறத்தால், ஊக்கம் மிக்க செயல்பாட்டால் நாய்வால் திரைப்பட இயக்கத்தை மிளிரச் செய்து வருகின்றனர்.

தமிழகத்தின் புகழ்ப் பெற்ற எழுத்தாளுமை, நம் சகா..நம் உலகத் தமிழ் மக்கள் அரங்கத்தின் பெருமைமிகு தோழமை ....தோழர் பாமரனின் சிறப்புரையும் உண்டு...
நம் உலகத் தமிழ் மக்கள் அரங்கத்தின் சக இயக்கமான நாய்வால் திரைப்பட இயக்கம் தனது அளப்பரிய செயல்பாடுகளால் திரைப்படங்கள் குறித்த மாற்றுச் சிந்தனைகளை முன் வைத்து வருகின்ற இந்த பெருமை மிகு சூழலில் உலகத் தமிழ் மக்கள் அரங்கம் தனது சகோதர இயக்கமான நாய்வால் திரைப்பட இயக்கத்தை பெருமையுடன் பாராட்டுகிறது..

தோழர் யுவனின் அழைப்பும்,.தோழர் ஜெயக்குமாரின் அழைப்பும் என்னைப் பொறுத்தவரையில் விலை மதிக்க முடியாதவை....அவர்களை நோக்கி என் தவறுதலுக்கான வருத்தத்தை பதிவு செய்கிறேன்.
என் சார்பாக தோழர் யுவனின் பங்கேற்பும் ,செயல்பாடும் சிறப்பாக அமையும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.
மேற்கண்ட விழாவில் நம் உலகத் தமிழ் மக்கள் அரங்கத்தின் சார்பாக நிர்வாகிகள் தோழர்.யுவன் பிரபாகரன்..,தம்பிகள் தமிழ்,நாசர் மற்றும் நம் உலகத் தமிழ் மக்கள் அரங்கத்தின் கோவை உறுப்பினர்கள் கலந்துக் கொள்ள இருக்கிறார்கள்... தம்பி இளவரசன் இறுதி நேரத்தில் எப்படியாவது சென்றுவிடுவதாக கூறியுள்ளான்.
தேர்வு வகுப்பு காரணமாய் என்னாலும் ,பணிப் பளு காரணமாய் தோழர் சசியாலும் கலந்துக் கொள்ள முடியவில்லை.. கடல் கடந்து இருக்கும் தோழர்கள் உமாசங்கர்,தயாள் ஆகியோரும் பணி காரணமாய் தலைநகரில் இருக்கும் தோழி விக்னெஷ்வரி..படப்பிடிப்பில் இருக்கும் பிரின்ஸ் என்னாரஸ் பெரியார் ஆகியோரும் இதில் அடக்கம்.

இருந்தாலும் எம் நினைவுகள் விழா சிறக்க வாழ்த்திக் கொண்டே இருக்கும்.
வாழ்த்துக்கள்.

உலகத் தமிழ் மக்கள் அரங்கம்
நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் சார்பாக...

மணி.செந்தில்குமார்

சிலைகள் குறித்தான பார்வையும்..பதிவும்...

சிலைகள் உருவாக்கப் படுவதன் தத்துவமும்,நோக்கமும்,வரலாறும் கண்டிப்பாக ஆராயத் தக்கவை...

சிலைகளின் தோற்றம் என்பது இறந்த மனிதனை மீள் புனைவு மூலம் அவரது நினைவை சாத்தியமாக்கும் தன்மையே ஆகும்....கிறிஸ்து பிறப்பதற்கு முன் சிலைகள் ஏற்படுத்தும் பழக்கம் இருந்துள்ளது...சிறு சிறு சிலை போன்ற வடிவங்களை சிந்துவெளி அகழ்வாரச்சியின் போதே கண்டெடுக்கப் பட்டுள்ளது...

எனவே சிலையின் தோற்றம் அண்மைக் காலத்தில் நிகழ்ந்தது அல்ல...

சிலைகள் தேவையா என்பது அந்தந்த மக்களின் சமூக ,அரசியல் வரலாற்றிக்கு உட்பட்டதாகும்...சிலைகள் உருவாக்குவது என்பது எதிர்காலத்திற்கு ஒரு குறிப்பிட்ட ஆளுமை குறித்தான செய்தியை நிரந்தரமாக விட்டுச் செல்லும் எண்ணத்தின் பாற் சார்ந்தது...

தந்தை பெரியார்,, அண்ணல் அம்பேத்கார் ஆகியோரின் சிலைகள் நிறுவப் படுதலை ஆதரிப்பதும் இவ்வகையை சார்ந்தது...பறவைகள் சிலைகள் மீது மட்டுமா அசிங்கம் செய்கின்றன...?

பறவைகளுக்கு சிலை,மனிதன் என்றெல்லாம் பேதமில்லை..நாம் துடைத்துக் கொள்கிறோம்..சிலைகளை மழை குளிப்பாட்டுகிறது. அவ்வளவே...

ஆற்றங்கரையில் இருக்கும் பிள்ளையார் மீதும் தான் பறவைகள் அசிங்கம் செய்கின்றன,,,,காக்கைகளுக்கு தெரியுமா...மனிதன் கண்டுபிடித்த கடவுளின் அரசியல்...?

ஒடுக்கப்பட்ட,விளிம்பு நிலை மக்களுக்கு போராடிய, மொழி ,இன உணர்விற்கு வித்திட்ட ,மக்களை சமூக தாழ்விநிலையில் இருந்து உயர்த்த துடித்திட்ட தலைவர்களுக்கு சிலை வைப்பது....கோவில் கட்டுவதை விட புனிதமான காரியம் ஆகும்.