3/23/08

சிலைகள் குறித்தான பார்வையும்..பதிவும்...




சிலைகள் உருவாக்கப் படுவதன் தத்துவமும்,நோக்கமும்,வரலாறும் கண்டிப்பாக ஆராயத் தக்கவை...

சிலைகளின் தோற்றம் என்பது இறந்த மனிதனை மீள் புனைவு மூலம் அவரது நினைவை சாத்தியமாக்கும் தன்மையே ஆகும்....கிறிஸ்து பிறப்பதற்கு முன் சிலைகள் ஏற்படுத்தும் பழக்கம் இருந்துள்ளது...சிறு சிறு சிலை போன்ற வடிவங்களை சிந்துவெளி அகழ்வாரச்சியின் போதே கண்டெடுக்கப் பட்டுள்ளது...

எனவே சிலையின் தோற்றம் அண்மைக் காலத்தில் நிகழ்ந்தது அல்ல...

சிலைகள் தேவையா என்பது அந்தந்த மக்களின் சமூக ,அரசியல் வரலாற்றிக்கு உட்பட்டதாகும்...சிலைகள் உருவாக்குவது என்பது எதிர்காலத்திற்கு ஒரு குறிப்பிட்ட ஆளுமை குறித்தான செய்தியை நிரந்தரமாக விட்டுச் செல்லும் எண்ணத்தின் பாற் சார்ந்தது...

தந்தை பெரியார்,, அண்ணல் அம்பேத்கார் ஆகியோரின் சிலைகள் நிறுவப் படுதலை ஆதரிப்பதும் இவ்வகையை சார்ந்தது...பறவைகள் சிலைகள் மீது மட்டுமா அசிங்கம் செய்கின்றன...?

பறவைகளுக்கு சிலை,மனிதன் என்றெல்லாம் பேதமில்லை..நாம் துடைத்துக் கொள்கிறோம்..சிலைகளை மழை குளிப்பாட்டுகிறது. அவ்வளவே...

ஆற்றங்கரையில் இருக்கும் பிள்ளையார் மீதும் தான் பறவைகள் அசிங்கம் செய்கின்றன,,,,காக்கைகளுக்கு தெரியுமா...மனிதன் கண்டுபிடித்த கடவுளின் அரசியல்...?

ஒடுக்கப்பட்ட,விளிம்பு நிலை மக்களுக்கு போராடிய, மொழி ,இன உணர்விற்கு வித்திட்ட ,மக்களை சமூக தாழ்விநிலையில் இருந்து உயர்த்த துடித்திட்ட தலைவர்களுக்கு சிலை வைப்பது....கோவில் கட்டுவதை விட புனிதமான காரியம் ஆகும்.

3/8/08

எழுத்தாளர்.எஸ்.ரா அவர்களுக்கு...




என் மதிப்பிற்கும்,மிகுந்த அன்பிற்கும் உரிய எஸ்.ரா அய்யா அவர்களுக்கு....

வணக்கத்துடன் மணி செந்தில். மிக நேர்த்தியாக ,அழகாக, தரமாக இணையத்தளம் உருவாகி உள்ளது..
மிகவும் மகிழ்ச்சி...

உங்களின் ஒவ்வொரு எழுத்தையும் எப்படியாவது தேடி வாசித்து விடுதலே வாழ்வின் இலக்காக கொண்ட எனக்கு இந்த இணையத்தளம் சிறகு முளைக்க வைத்துள்ளது.....

என் தவிப்பும்,தணிப்பும் உங்கள் எழுத்துக்கள் மூலமே நிகழ்கின்றன...இரவின் ஏதோ ஒரு புள்ளியில் நான் விழிக்கும் போது இன்றளவும் நடந்து செல்லும் நீருற்றில் மனம் நனைக்காமல் படுக்க முடியவில்லை...

உங்கள் புத்தகங்களை படிக்க எனக்கு கால,நேர,இட வரையறைகள் இல்லை..நெடுங்குருதியின் ஏதோ ஒரு பக்கத்தை எடுத்து வைத்துக் கொண்டு வாசிக்க துவங்குவேன்....துணையெழுத்தை இன்று வாசித்தாலும் கண்கலங்குகிறேன்...ஏதேனும் முடிவில்லாத சாலைகளில் அந்த எளிய மனிதர்களை கண்டு விட மாட்டோமா என்று தவிக்கிறேன்..பின்னிரவின் விழிப்பின் ஊடே எனக்கு சதா உபபாண்டவத்து சகுனியின் பகடை உருட்டும் ஒலி துரத்திக் கொண்டே உள்ளது...

நான் அதிகம் நிம்மதியாக இருப்பதும் ,நிம்மதியற்று போவதும் தங்கள் எழுத்துக்களால்தான்...

ஒரு வாசகனை ஒரு படைப்பாளன் இந்த அளவில் பாதிக்க முடியுமா என்பதே எனக்கு மிகுந்த ஆச்சர்யமாக உள்ளது.

இன்னும் நிறைய இருக்கிறது...

ஒரு மழை பொழியும் நாளில்....
நாம் இதை கும்பகோணத்தில் உள்ள நம் வீட்டின் மொட்டை மாடியில் அமர்ந்து பேசுவோம்......

முடிவிலியாக நீளும் நம் உரையாடல்களின் மூலமே நான் மீதி நாட்களில் வாழ்வதற்கான ஆர்வத்தையும், ஆசையையும் சேகரித்துக் கொள்கிறேன்...

மிகுந்த மகிழ்ச்சியோடு....
உங்களின் எளிய வாசகன்.
மணி.செந்தில்

எழுத்தாளர்.எஸ்.ரா அவர்களுக்கு...




என் மதிப்பிற்கும்,மிகுந்த அன்பிற்கும் உரிய எஸ்.ரா அய்யா அவர்களுக்கு....

வணக்கத்துடன் மணி செந்தில். மிக நேர்த்தியாக ,அழகாக, தரமாக இணையத்தளம் உருவாகி உள்ளது..
மிகவும் மகிழ்ச்சி...

உங்களின் ஒவ்வொரு எழுத்தையும் எப்படியாவது தேடி வாசித்து விடுதலே வாழ்வின் இலக்காக கொண்ட எனக்கு இந்த இணையத்தளம் சிறகு முளைக்க வைத்துள்ளது.....

என் தவிப்பும்,தணிப்பும் உங்கள் எழுத்துக்கள் மூலமே நிகழ்கின்றன...இரவின் ஏதோ ஒரு புள்ளியில் நான் விழிக்கும் போது இன்றளவும் நடந்து செல்லும் நீருற்றில் மனம் நனைக்காமல் படுக்க முடியவில்லை...

உங்கள் புத்தகங்களை படிக்க எனக்கு கால,நேர,இட வரையறைகள் இல்லை..நெடுங்குருதியின் ஏதோ ஒரு பக்கத்தை எடுத்து வைத்துக் கொண்டு வாசிக்க துவங்குவேன்....துணையெழுத்தை இன்று வாசித்தாலும் கண்கலங்குகிறேன்...ஏதேனும் முடிவில்லாத சாலைகளில் அந்த எளிய மனிதர்களை கண்டு விட மாட்டோமா என்று தவிக்கிறேன்..பின்னிரவின் விழிப்பின் ஊடே எனக்கு சதா உபபாண்டவத்து சகுனியின் பகடை உருட்டும் ஒலி துரத்திக் கொண்டே உள்ளது...

நான் அதிகம் நிம்மதியாக இருப்பதும் ,நிம்மதியற்று போவதும் தங்கள் எழுத்துக்களால்தான்...

ஒரு வாசகனை ஒரு படைப்பாளன் இந்த அளவில் பாதிக்க முடியுமா என்பதே எனக்கு மிகுந்த ஆச்சர்யமாக உள்ளது.

இன்னும் நிறைய இருக்கிறது...

ஒரு மழை பொழியும் நாளில்....
நாம் இதை கும்பகோணத்தில் உள்ள நம் வீட்டின் மொட்டை மாடியில் அமர்ந்து பேசுவோம்......

முடிவிலியாக நீளும் நம் உரையாடல்களின் மூலமே நான் மீதி நாட்களில் வாழ்வதற்கான ஆர்வத்தையும், ஆசையையும் சேகரித்துக் கொள்கிறேன்...

மிகுந்த மகிழ்ச்சியோடு....
உங்களின் எளிய வாசகன்.
மணி.செந்தில்

1/8/08





தோழர்களே....

குஷ்பு பிரச்சனை சம்பந்தமாக நாம் ஒருவரை ஒருவர் கிண்டல் அடித்துக் கொண்டோ, தாழ்த்திக் கொண்டோ பேச தேவை இல்லை...

மிகத் தீவிரமாக நமது கண்டனக் குரலை பதிவு செய்ய வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது....

தோழர்.திருமாவளவன்....திரைப் படங்களில் நடிப்பது இமாலய குற்றம் அல்ல...சினிமாவும் தீண்டதகாத பொருளும் அல்ல....

சாணிப்பால் புகட்டப் பட்டு, காலங்காலமாய் சாதி என்னும் இழிவில் சிக்கி தாழ்த்தப் பட்டு, அலைகழிக்கப்பட்ட ஒரு சமூகத்தின் பிரதிநிதி திருமா....

திருமாவின் மொழி உணர்வும், இனப் பற்றும் அப்பழுக்கற்றது......சமூக சிந்தனை உடைய போர்க் குணம் மிக்க தோழர் திருமா மதிப்பிற்குரியவர் என்பதில் தமிழனாய் உணருபவர்களுக்கு எள்ளளவும் சந்தேகம் இல்லை....

நம் பண்பாடு தெரியாத, நம் இனத்து பெண்களுக்கு கற்பு இல்லை என்று ஆபாச அவதூறு பேசிய குஷ்பு இது வரை சமூகத்திற்காக எந்த களத்தில் நின்றுள்ளார்..?

தோழர் திருமா நின்ற களங்கள் நாடறிந்தது..புலம் பெயர்ந்த நமது சகோதரர்கள் மத்தியில் அவருக்குள்ள மதிப்பு பெருமைக்குரியது...

நடந்த அந்தக் கூட்டத்தில் யாரும் குஷ்புவிடம் போய் மரியாதை யாசகம் கோர வில்லை.....அந்த பெண்மணியே வலிய சென்று திருமாவிற்கு வணக்கம் வைக்கவில்லை என்றால் என் மீது வழக்கு போடுவார்கள் என்று நக்கல் பேசிய பிறகுதான் பிரச்சனை துவங்கியது.....

குஷ்புவிற்கு ஒரு தமிழனை பார்த்தால் , ஒரு தமிழச்சியை பார்த்தால் இழிவுப் படுத்த வேண்டும் என்ற குணம் இயல்பாகவே உள்ளது...

ஏற்கனவே நம் மண்ணின் கலைஞன் தங்கர் பச்சான் மீது கருத்து தாக்குதல் நடத்திய
குஷ்பு , ஜெயா தொலைக்காட்சியில் தங்கரா...who is he...? என்று கேட்ட குஷ்பு...
பெரியார் பட விழாவில் தங்கர்பச்சான் ஒளிப் பதிவில் நடிக்காதது எனக்கு குறையாக உள்ளது என்று வருந்தினார்...

தோழர்.திருமா நம் மண்ணின் அடையாளம் .....முதலில் ஒரு அவர் ஒரு தமிழன்...

நம் வீடுகளில் வந்தோரை வரவேற்று உபசரித்து பாராட்டும் பண்பாடு நம்முடையது..

தோழர்.திருமாவளவன் வந்தவுடன், கால் மேல் கால் போட்டுக் கொண்டு தலையை திருப்பிக் கொண்ட குஷ்பு பின் வலியச் சென்று வம்பிற்கிழுத்து நம் உணர்வை சீண்டி பார்க்கிறார்...

அதே கூட்டத்தில் கலந்து கொண்ட நம் தமிழனப் பாவலர் அண்ணன் அறிவுமதி தன்னுடைய கண்டனத்தை உடனே பதிவு செய்துள்ளார்....

அந்த குஷ்பு விற்கு விமர்சனத்தை தாங்கிக் கொள்ள இயல்பு இல்லை என்பதால் அவர் அவசர , அவசரமாக கூட்டத்தை விட்டு வெளியேறி உள்ளார்..

தாழ்த்தப் பட்ட மக்களின் புரட்சிக் குரலான தோழர் .திருமாவளவன் மதிப்பு மிகுந்தவர் என்ற கருத்தாக்கத்தை நோக்கி தன்னுடைய வம்பிற்கிழுக்கும் ஆயுதத்தால் தாக்க முனைந்துள்ளார்...

குஷ்பு மேற்கொண்டுள்ள தாக்குதல் ஒட்டுமொத்த தமிழர் நிலைகளுக்கு எதிரானது.....

தோழர் திருமா விற்கு குஷ்புவின் மதிப்பு தேவை இல்லை....

ஆனால் குஷ்பு கண்டனத்திற்கு உரியவர் என்பது அவரது கவனத்தில் கொள்வதற்காவே இந்த பதிவுகள் பதிக்கப் படுகின்றன......

இது போன்ற செயல்களுக்கு குறைந்த பட்ச நம் எதிர்ப்பை காட்ட வில்லை என்றால்
நாம் தமிழர்களாய் உணர்வதில் அர்த்தம் இல்லை....

குஷ்புவை கூட்டத்திற்கு அழைத்தது தவறில்லை....குஷ்பு அப்படி நடப்பார் என்று யாரும் எதிர்ப்பார்க்க வில்லை....

குஷ்பு நடந்த கொண்ட விதம்......நமக்கு சவால் விடுப்பதை போல் அமைந்துள்ளது....

தமிழர்கள் தங்களின் உணர்வை வெளிப் படுத்தும் ஒரு களமாகவே உலகத் தமிழ் மக்கள் அரங்கத்தை பயன் படுத்தி வருவதில் என்ன தவறு.......

உலக தமிழ் மக்கள் அரங்கம் -இணையம் பயன் படுத்தும் தமிழர்களால் வாசிக்கப் பட்டு வருகிறது,....

எனவே உண்மையை எடுத்து கூற ......எங்கள் கருத்துக்களை கூற நம் மக்கள் அரங்கம் ஒரு களமாக நாங்கள் பயன் படுத்துகிறோம்.....
தோழர்களே...

குஷ்பு கலந்து கொண்ட விழாவை தோழர் திருமா புறக்கணித்து இருக்கலாமே என்ற கருத்தை தோழர் யுவன் பிரபாகரன் முன் வைத்துள்ளார்...

..அது ஒரு இலக்கிய விழா.....இலக்கிய அறிமுகம் , உலக புரட்சி,தலித்தியம் ,பெண்ணீயம் போன்ற தளங்களில் நல்ல அறிமுகம் உடைய தோழர்.திருமாவளவன் கலந்து கொள்வது தவறா..?

மேலும் குஷ்பு இப்படி அநாகரிகமாக, தமிழர்களை சீண்டி பார்க்கும் வகையில் செயல்படுவார் என்பதை யார் அறிந்திருக்க முடியும்..?

எதிரி வந்தால் கூட அன்புடன் உபசரித்து ,மரியாதை செய்வது தமிழர் பண்பாடு இல்லையா..?

குஷ்புவிற்கென்ன அவ்வளவு ஆணவம்...?

தமிழர்களிடையே நிலவும் அரசியல்,கோஷ்டி பூசல், சாதி ஆகியவைகளை தனக்கு சாதகமாக குஷ்பு பயன்படுத்துகிறார்....

இது அறிவுமதிக்கோ , திருமாவளவனுக்கோ, இழிவு இல்லை...

கலைஞர்,இராமதாஸ்,திருமாவளவன், கிருஷ்ணசாமி, போன்ற தமிழர் தலைவர்கள்
யார் அவமானப் பட்டாலும் அது ஒட்டுமொத்த தமிழர்களுக்கானது...

இதில் தோழர்கள் கிண்டல் செய்வதற்கும் ,கேலி செய்வதற்கும் என்ன இருக்கிறது...?

பாவலர் அறிவுமதி எழுப்பிய கலகம் இயல்பிலேயே தமிழனாய் உணருபவனுக்கு உரியது.....

அந்த இடத்தில் நான் இருந்தாலும் அதை தான் செய்திருப்பேன்...

இதில் நமக்குள் இருக்கும் அரசியலை ,கோஷ்டிப் பூசலை காட்ட இதுவா நேரம்...?

தோழர் சம்போ ஏன் கோபப் படுகிறார்...அவர் என்ன சொல்ல வருகிறார்,,?

குஷ்பு செய்தது சரி என்று சொல்ல என்ன காரணங்கள் வைத்திருக்கிறார் சம்போ..?

பதில் சொல்ல காத்தி இருக்கிறேன்...

இதில் கருத்து சுதந்திரம் எங்கிருந்து வந்தது என்று தோழர் .யுவன் தான் சொல்ல வேண்டும்....

கருத்து சுதந்திரம் வேறு...தமிழன் மேல் திணிக்கப் படும் இழிவு என்பது வேறு....

திருமாவை விட குஷ்பு தோழர்களுக்கு எவ்விதத்தில் உகந்ததாக இருக்கிறார்...?

என்பதை தெரிவித்தால் நலம்...

இந்த பிரச்சனையில் நமது ஒற்றுமையை காட்டுவதே சாலச் சிறந்தது.....

தோழர்.திருமாவளவன் ஒரு தாழ்த்தப் பட்ட சமூகத்தை சேர்ந்த தலைவர் என்பதால் குஷ்புவிற்கு வரம்பு மீறிய கருத்து சுதந்திரம் வந்து விடுமா என்ன..?

தலித்தியம், பெண்ணீயம் ,பெரியாரியம,தமிழ் உணர்வு், போன்றவற்றை முன் எடுத்து செல்கிற தோழர்.திருமாவளவன் மீது குஷ்பு வீசும் அலட்சியமும், துர்நோக்கும் உடைய
இழிவு ,,,,
'

கலைஞர்,மருத்துவர் ராமதாஸ்,மருத்துவர் கிருஷ்ணசாமி,பழ.நெடுமாறன், கொளத்தூர் மணி, இடது சாரி தோழர்கள்,சுபவீ, தியாகு என்று யார் மீது வீசப் பட்டாலும் அது எதிர்ப்பிற்குரிய விஷயம் இல்லையா..?




தோழர்களே....

நமக்குள் எழுந்த இந்த விவாதம் ஆரோக்கிய கருத்துக்களை பேசிக் கொள்ளவே துவங்கப் பட்டது.....

எந்த மனிதருக்கும் தனிப்பட்ட கருத்துக்கள் என்று ஒன்று உண்டு.....

தனிப்பட்ட கருத்துக்கள்,கருத்து சுதந்திரம் போன்ற உரிமைகள் மற்றவர்களை காயப் படுத்தாமல் இருப்பதே சிறந்தது...

குஷ்பு தொடர்ந்து தனது செய்கைகளால் ஊடகப் பரபரப்பிற்கு ஆளாகி வருவது சிந்தனைக்குரிய கேள்வி...

தமிழனாய், தமிழ் உணர்வோடு வாழ்வது என்பதே இப்போது கிண்டலுக்குரிய, கேலிக்குரிய விஷயமாய் மாறிப்போனது என்பது தான் என் கவலை....

கலைப் போராளி சீமான் சொன்னது போல உலகிலேயே அதிகம் இழிவுகளையும் அவமானங்களையும் சந்தித்தது -நம் தமிழினமாகத்தான் இருக்க முடியும்...

தான் கேவலப் படுத்தப் படுகிறோம் என்பது கூட இங்கே நகைச்சுவைக்கு உரிய விஷயமாகப் போனது நமது குறை....

தமிழன், சாதி துறந்து, அரசியல் மறந்து, கோஷ்டி தொலைந்து தமிழனாய் வாழும் காலம் எப்போது வரும் என்ற சிந்தனையோடு.... இந்த இரவில் உங்களிடத்தில் இருந்து விடை பெறுகிறேன்......நன்றி.....வணக்கம்