5/19/08

பதுங்குக் குழிகளை தேடும் ஞாநி....

குமுதம் இதழில் ஓ பக்கங்களில் பேரா.சுப.வீ குறித்து அவதூறுகளை அள்ளி வீசிய ஞாநி தொடர்ந்த நம் எதிர்ப்புகளால் இப்போது பதுங்குக் குழிகளை தேடி அலைகிறார்..திடீரென்று இந்த வாரம் மருத்துவர் ராமதாஸை ஆதரித்துள்ளார்...ஜெயலலிதா ஆட்சியில் ஒகேனக்கல் திட்டம் இம்மியளவும் நகர்த்தப் பட வில்லை என்று சாமரம் வீசிய கைகள் இன்று சாமர்த்தியம் பேசுகின்றன...மாலடிமை ..என்றும் தமிழ் கலாச்சார காவலர்
என்றும் மருத்துவர் அய்யாவை தூற்றியவர் பாய்ந்து வரும் எதிர்ப்புகளால் இன்று பதுங்குக் குழிகளை தேடி அலைகிறார்...

ஞாநி...அவர்களே...
கருத்துச் சுதந்திரத்தின் நவீன காவலரே....தங்கள் ஆர்குட் குழுமத்தில் இருந்து மாற்றுக் கருத்துக்கள் வைத்தேன் என்ற ஒரே காரணத்திற்காக என்னை தடை செய்துள்ளீர்கள்...என் கருத்துகளும் ....என் அண்ணன் அறிவுமதியின் கடிதம் அடங்கிய கட்டுரையை ...தங்களை அம்பலப் படுத்தி விடும் என்ற அச்சத்தால் அவசர..அவசரமாக ..முன் அறிவிப்பின்றி...அகற்றி உள்ளீர்கள்..இது தான் தங்களின் கருத்து காவலின் கதை....விவாதத்தில் பங்கெடுக்க முடியாத தாங்கள்.....எங்கு பதில் சொன்னால் உள்ளத்தில் ஒளிந்திருக்கும் சூழ்ச்சியை உருவி விடுவார்கள் என்று அஞ்சும் நீங்கள்... உண்மைத் தமிழனாய்....உணர்வின் வீரனாய் பொங்கி எழுந்து ....ஆவேசமாய்.....உங்கள் ஆணி வேரை ஆட்டி பார்த்த ...சத்யராஜ் அவர்களுக்கு குட்டு வைக்கிறீர்கள்.....சத்யராஜ் சங்கர மடத்து பெருமைகளை பாடி இருந்தால் பூச்செண்டு கொடுத்து இருப்பீர்கள்..

...ஒரு மனிதனை குட்டுவேன் என்று எழுதுவது வன்முறை இல்லையா....
எந்த தகுதி உங்களுக்கு குட்டும் அதிகாரத்தை வழங்கியது என தெரிந்து கொள்ளலாமா....ஞாநி.....தலையில் தோன்றிய தகுதியா...?

ஞாநி அவர்களே....

தங்களை அம்பலப்படுத்துவதை நான் இந்த தமிழுலகிற்கு செய்யும் பெரிய சேவையாக கருதுகிறேன்...தாங்கள் மிகவும் ஆபத்தானவர்....தமிழகத்தின் மிகப் பெரிய இதழியல் ஊடகங்களான ஆனந்த விகடனிலும்,அதற்கு பிறகு குமுதத்திலும் தொடர்ந்து தமிழ் பண்பாட்டு நிலைகள் மீதும்,திராவிட இயக்க ஆளுமைகள் மீதும் கருத்துத் தாக்குதலை தொடர்ந்துள்ளீர்கள்..இந்த தாக்குதல் சிங்கள பேரினவாத அரசு எம் ஈழ உறவுகளின் மீது தொடுத்திருக்கும் வன் தாக்குதலுக்கு இணையானது...சிங்கள இராணுவத்தின் தாக்குதலாவது இந்த தலைமுறையோடு நின்று விடும்...எம் தொப்புள் கொடி உறவுகளின் அடுத்த தலைமுறை சுதந்திர காற்றை சுவாசிப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது...ஆனால் தாங்கள் ஊடகங்களில் பரப்பி வரும் தமிழ் உணர்வாளர்கள் ,மற்றும் திராவிட கருத்தாக்க சிந்தனையாளர்களின் மெய் நிலைகளை திரிக்கும் கருத்து திணிப்புகள் ஒட்டுமொத்தமாக தடுக்கப் படவேண்டிய ஒன்றாக நான் கருதுகிறேன்....

இத்தனை ஆண்டு காலம் உங்களது முன்னோர்கள் எங்களது பண்பாட்டு வரலாற்றை அவர்களுக்கு சாதகமாக மாற்றி எழுதினார்கள்..பார்ப்பனர்கள் அடுத்தவரை ஏய்த்து..அரசனை கருத்தால் மாய்த்து...,மாய்மாலம் செய்து உச்சாணிக் கொம்பில் கொழுத்து இருந்து..சதுர்வேதி மங்கலங்களை,பட்டவர்த்திகளை பெற்ற காலங்களை பொற்காலம் என்றும்...சாதி வேறுபாடுகளை தகர்த்து,, பார்ப்பனர்களுக்கான சலுகைகள் மறுக்கப் பட்ட காலங்களை இருண்டகாலங்கள் என்று தமிழ் வரலாற்றை தங்களுக்கான வரலாறாக எழுதிய அதே உத்தியைத் தான் இன்று தாங்களும் எழுதுகிறீர்கள்.....

தாங்கள் எழுதியுள்ள தவறான...உண்மைக்கு திரிபான கருத்துக்களை எதிர்கால தமிழகம் அப்படியே வடிக்கட்டலின்றி வரலாறாக கவனித்து விடும் என்பதற்காகவே தாங்கள் கருத்துகள் மீது இவ்விதமான தொடர் மாற்றுக் கருத்துக்களை வைத்து வருகிறேன்...
தங்களை நேரடியாக விவாதத்திற்கு அழைக்கிறேன்.....நீங்கள் புழங்கும் உங்கள் தளத்திலேயே வந்து எழுதுகிறேன்....உண்மை இருப்பின்...உங்கள் கருத்தில் தெளிவு இருப்பின் ...உங்களது ஆரவாரமான சேனைகளோடு வந்து விவாதிக்க வேண்டியது தானே..?

அதை விடுத்து.....என் கட்டுரையை அழிக்கிறீர்கள்...என்னை தடை செய்கிறீர்கள்....
இது கருத்து சர்வாதிகாரம் இல்லையா...தங்கள் கருத்துக்களை அப்படியே தமிழன் தயங்காமல் முழுங்கி விட வேண்டுமா என்ன......

சென்ற முறை தந்தை பெரியாரை தாங்கள் இழிவுப் படுத்தியது குறித்து தாங்கள் என்னோடு நடத்திய விவாதத்தில் உங்கள் ஆர்குட் குழுமத்தையே அழிக்க வேண்டும் என உத்திர விட வில்லையா....?

தங்களது கருத்துகளை வெளியிடும் குமுதமும் அடுத்த வாரம் தங்கள் அவதூறு கருத்துகளை எதிர்த்து பேரா.சுப.வீ அவர்களின் பதிலையும்..அவரின் பதிலுக்கான உங்களது எதிர்வினையையும் ஒரே இதழில் வெளியிட துணிந்திருப்பதும் தங்களை காப்பாற்றும் செயலாகவே நான் பார்க்க வேண்டியுள்ளது...குமுதம் போன்ற மக்கள் அதிகமாக படிக்கக்கூடிய இதழ் ..இப்படிப்பட்ட அவதூறுகளை வெளியிடுவது தவறு...இந்த போக்கு எதிர்காலத்தில் பிழையான வடுவாக எஞ்சி இருக்காதா...?

இத்தனை ஆண்டு காலம் தமிழ் அறிவுலகில் இயங்கி வந்துள்ளீர்கள்...தங்களை எத்தனையோ மேடைகளில் ...ஊடகங்களில் நிறுத்தி வைத்து.....கைத் தட்டிய தமிழர்கள் மீது கொஞ்சமும் நன்றி இல்லாமல் தொடர்ந்து தவறாகவே எழுதி வருகிறீர்கள்...

விவாதத்திற்கு வாருங்கள் ஞாநி..அதை உலகத் தமிழர்கள் சார்பில் நான் வரவேற்கிறேன்...உங்களது அனைத்து பதிலுக்கு பதில்களுக்கும் எங்களிடம் தலைமுறை கடந்த கேள்விகள் இருக்கின்றன..அதனை விடுத்து பதில் சொல்லாமல் சாதூர்ய சந்தில் பதுங்காதீர்கள்....

இந்த சின்னத் தூறலுக்கே...
இப்படி இரும்புக் குடைக்குள்
ஒண்டுகிறீர்களே.......
நாளைய நெருப்பு மழைக்கு
எந்தக் குடையில்...
அடேய்..
எந்தக் குடையில்...

-பாவலர். அறிவுமதி..

இளையராஜா-தமிழ் மண்ணின் இசை......

வணக்கம் தோழர்களே....
சமீபநாட்களாகவே இசைஞானி இளையராஜா குறித்து பலவித விமர்சனங்கள் எழுந்து வருவதன் நீட்சியாக இக்கட்டுரை அமைகிறது...

இளையராஜா என்ற உன்னத இசையமைப்பாளனின் தனி மனித வாழ்வியலில் நுழைந்து எட்டிப் பார்த்து அதை விமர்சிக்கிற உரிமை எனக்கில்லை என்ற அடிப்படை கருதுகோளோடு துவங்கும் நான் அவரின் இசை சித்திரங்களில் நான் அறிந்த ,உணர்ந்தவைகளை நிறுவுவதன் மூலம் அந்த மாமேதை எப்படி மற்ற இசை வல்லுனர்களை விட தனித்து நிற்கிறார் என்பதற்காகவும் ,அவரின் தனித்துவமான இசைக் கூறுகள் எப்படிப்பட்ட உச்சங்களை தொடுகின்றன என்பதை நான் உணர்ந்தவைகளை உங்களிடத்தில் பதிவு செய்ய கடமைப்பட்டவன் என்பதற்காகவும் இந்த இக் கட்டுரையை எழுதுகிறேன்..

தமிழ்சினிமாவின் ஆரம்ப கால இசைக் கூறுகள் மேட்டிமைத் தனம் வாய்ந்த ,கர்நாடக இசை அறிவு உடைய மேலோருக்கும் உடையதாக இருந்தது என்பதும்,நாடகத்தின் நவீன வடிவமாய் சினிமா தோன்றியதால் இசை என்ற அம்சம் முழுக்க நாடகத் தன்மை நிறைந்ததாக விளங்கியது என்பதில் யாருக்கும் எவ்வித சந்தேகமுமில்லை...

சினிமா என்ற அம்சம் மெல்ல மெல்ல பாமர மனிதர்களை ஈர்க்க துவங்கியதன் விளைவுகள் திரையசையிலும் எதிரொலிக்க துவங்கியது..

தமிழ்த்திரையுலகில்சி.ஆர்.சுப்பாராமன்(தேவதாஸ்),
எஸ்.வி.வெங்கட்ராமன்(மீரா),எஸ்.ராஜேஸ்வரராவ்(மிஸ்ஸியம்மா),
கண்டசாலா(பாதாளபைரவி,மாயாபஜார்),ஜி.ராமநாதன் (ஹரிதாஸ்,உத்தம புத்திரன்,அம்பிகாபதி) போன்ற இசைமேதைகள் மின்னத் துவங்கினர்.

திருவிளையாடல் ,வசந்தமாளிகை போன்ற படங்களுக்கு இசையமைத்த கே.வி.மகாதேவன் அவர்களும் திரையிசையில் மறக்க இயலாத உச்சத்தை தொட்டவர்தான்.
1957-ல் மாலையிட்ட மங்கை படத்தில் அறிமுகமான மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன் –ராமமூர்த்தி என்ற இரட்டையர் தமிழ் திரையிசையின் போக்குகளை மாற்றத் துவங்கினர்.பாமர மக்களும் ,எளிய மக்களும் திரை இசை சுகத்தை அனுபவிக்க துவங்கினர்.
மெல்லிசை மன்னர்கள்,ஏ.எம்.ராஜா,போன்றோர் திரையிசையின் திரைக் கட்டுகளை மெதுவாய் நெகிழ்த்தி அதை சாதாரண மக்களின் உணர்வு தளத்திற்கு கடத்தினர்....மக்கள் திரையிசையை தன் சாதாரண வாழ்க்கையின் மறுக்க முடியாத அம்சமாய் வரையறுத்துக் கொண்டதும் இந்த காலக் கட்டதில்தான்...

தமிழ் திரையுலகில் பாபி,குர்பானி,சத்யம் சிவம் சுந்தரம் உள்ளிட்ட இந்தி திரையிசையின் தாக்கம் மிகுதியாக இருந்த காலக் கட்டத்தில் ,நவ நாகரீக தூதுவர்கள் என்று தன்னை அறிமுகப் படுத்திக் கொள்ள துடித்த இளைஞர்களின் உதட்டில் இந்திப் பாடல்களே உட்காரத் துவங்கியது.
அந்த நேரத்தில்தான் அன்னக் கிளி படம் மூலம் ஒரு குக்கிராமத்தில் இருந்து,தாழ்த்தப் பட்ட குடும்பத்தில் பிறந்து,கருத்த நிறத்தில்,சினிமா உலகிற்கென வகுக்கப் பட்ட எந்த ஒரு இலக்கணத்திற்கும் உட்படாத ,
சாஸ்திரீய சங்கீத நுணுக்கங்கள் ஏதும் அறியாத,எளிய மக்களின் அடையாளமாய் நுழைந்த இளையராஜாவின் பிரவேசம் நடந்தது.

இளையராஜாவின் இசை துவக்கம் முதலே மனித உணர்வின் தளத்தின் ஊடே நுழையும் வித்தையை தெரிந்துவைத்திருந்தது தான் இன்றளவும் எனக்குள்ள ஆச்சர்யம்.
முதல் பாடல் அன்னக் கிளியே உன்னை தேடுதே என்ற பாடலில் அவர் நம் தமிழ் மண்ணுக்கே உரிய நாட்டுப் புறத்தன்மையும்,வளைவும் நெளிவும் நிறைந்த புல்லாங்குழல் இசையோடு கூடிய ,ஒரு கிராமத்து வாழ்வியலை நினைவுக் கூறும் ,மெல்லிய மேற்கத்திய இசை வடிவங்களின் அடிப்படையோடு கலந்த புதுமையான இசையை வழங்கினார்...

கோரஸ் என்ற கூட்டுப் பாடல் உத்தியை மிகவும் அழகாக தன் பெரும்பாலான பாடல்களில் கையாளுகின்ற இளையராஜா அதற்கென பாடலோடு இழைகின்ற சின்னச் சின்ன உத்திகளால் அந்தப் பாடலை ஒரு அழகான கவிதையாய் மலர்த்துவதில் தனித் திறமை கொண்டவராக இருக்கிறார்..

இளையராஜாவின் ஆரம்பகால படங்களான , சிட்டுக்குருவி,கவிக்குயில் பத்ரகாளி போன்ற பாடங்களில் தனக்கேரிய தனி முத்திரை எதுவென தேர்ந்தெடுக்க இளையராஜாவிற்கு எந்த ஒரு குழப்பமும் இருந்ததில்லை.

கவிக்குயில் என்ற திரைப் படத்தில் சின்னக் கண்ணன் அழைக்கிறான் என்ற பாடல் இன்றும் கவனித் தக்க இசையை கொண்டிருக்கிறது...அந்தப் பாடல் முழுக்க நீரோடை போன்ற ஒட்டத்தை கொண்டது...குறிப்பாக அந்த பாடலை பெண் குரலில் கேட்கும் போது ...முதலில் அதிர்ச்சி அம்சத்துடன் துவங்கும் சோக உணர்வை ஏற்படுத்தும் வயலின் இசையையும், இனிய புல்லாங்குழல் குரலோடு,பனி இரவில் பெளர்ணமி நிலவில் தனியாய் ஒடும் ஒற்றை நீரோடை காண்பதில் உள்ள சுகத்தை ஏற்படுத்தும்.

அதே போல சிட்டுக்குருவி என்ற படத்தில் வரும் என் கண்மணி என்று துவங்கும் பாடல் மிகவும் வித்தியாசமான முயற்சி..இரட்டை குரலோடு ஒலித்தாலும், அந்த குரல்களின் இடைவெளி தூரத்தை இளையராஜா வகுத்திருக்கும் தன்மை பிரமிக்க வைக்கக் கூடியது. அந்த பாடலின் ஊடே பேருந்து பயணச் சுவடுகளை விதைத்து அந்த பாடலை அழகானதாக ,அபூர்வமான ஒன்றாக வடிவமைத்து இருப்பார் ராஜா.

சக்களத்தி படத்தில் வாடை வாட்டுது என்ற பாடல் இரவின் தனிமையும்,தன்னிரக்கத்தையும் நம்மிடையே விதைக்க வல்லது.
இதே போன்ற பாடல்தான் மலைக்கிராமத்தின் இரவினைப் பற்றிப் பேசும் ரோசாப்பூ ரவிக்கைக்காரி படத்தில் வரும் உச்சி வகுந்தெடுத்து என்ற பாடல்.

கல்லுக்குள் ஈரம் படத்தில் வரும் சிறு பொன்மணி துவங்கும் பாடல் சரணமும் ,பல்லவியும் நீண்ட தொடர்களாக அமையும் வண்ணம் அமைத்திருப்பது புதுமை.இதே உத்தியை அவர் ஆறிலிருந்து அறுபது வரை படத்தில் வரும் கண்மணியே ...காதல் என்பது என்ற பாடலிலும் ,கேளடி கண்மணி படத்தில் மண்ணில் இந்த ..என்ற பாடலிலும் ,புதிய வார்ப்புகள் படத்தில் தம் தன தம் தன தாளம் வரும் என்ற பாடலிலும் பயன்படுத்தி இருப்பார்.

நிறம் மாறாத பூக்கள் படத்தில் ஆயிரம் மலர்களே மலருங்கள் என்ற ஒரு பாடலுக்காகவே தனிக் கட்டுரை எழுதலாம்...இசைக் கலவையின் உச்சம் அது.ஜென்ஸி என்ற மயக்கும் குரல் உடைய பாடகி தன்னால் முடிந்த அளவிற்கு அந்த பாடலை கிளாசிக் என்ற வகையில் சேர்த்திருப்பார்...
இதே போன்ற பாடல்தான் கரும்பு வில் திரைப்படத்தில் வரும் மீன் கொடி தேரில் மன்மதராஜன்..என்ற பாடல் மற்றும் பூபாளம் இசைக்கும் பூமகள் ஊர்வலம்.....என்ற பாடல்களும்...

அதே போல் உதிரிப் பூக்கள் படத்தில் கேட்கும் போதெல்லாம் நம்மை உள்ளுக்குள் கலங்க வைக்கும் அழகிய கண்ணே என்ற பாடலின் தனித்துவத்தை உணர்ந்து காட்சியமைப்பில் கவிதையாக்கி இருப்பார் மகேந்திரன்...தாயின் வாசனையையும், தனிமையின் துயரத்தையும் அந்த பாடல் இன்றளவும் கசிய விட்டுக் கொண்டிருக்கிறது.இதே போன்ற மற்றொரு பாடல் மூன்றாம் பிறை படத்தில் வரும் கண்ணே கலைமானே...என்ற பாடல்.

அலை அலையாய் துவங்கும் 16 வயதினிலே திரைப்பட பாடல் செந்தூரப் பூவே என்ற பாடலில் நாட்டுப் புற இசை வடிவங்களை கொண்டு பருவத்தின் கனவுகளை மெல்லிய சோகத்துடன் வடிவமைத்து இருப்பார்....

மெல்லிய ராகமாய் ,ஒரு பூ அவிழ்வது போல உச்சத்தை எட்டும் மற்றொரு பாடல் ஜானி திரைப்படத்தில் காற்றில் எந்தன் கீதம் என்ற பாடல்...அதில் முதல் முதல் பல்லவிக்கு முன்னர் சேர்க்கப் பட்டிருக்கும் இசைக் கோர்வை மிகவும் பிரசித்தமானது. அதே படத்தில் வரும் மற்றொருப் பாடலான என் வானிலே என்ற பாடலும் மிகவும் நல்ல உணர்வுகளை நம்மில் எழுப்பக் கூடியது.

ஜாஸ் வகை பாடல்கள் என்ற வரிசையில் ஒலிக்கும் சிவப்பு ரோஜாக்கள் பாடலான இந்த மின்மினிக்கு ...என்ற பாடலில் துவக்கத்தில் மற்றும் நடுவில் வரும் பெண்ணின் கோரஸ் குரல் கேட்க மிகவும் சுவாரசிய தன்மையை உடையது.விக்ரம் படத் தலைப்பு பாடலான விக்ரம் என்ற பாடலில் வரும் பெண்களின் கோரஸ் குரல் கோர்வைகளும் இத்தகையதே...

காதலாகட்டும், காமம் ஆகட்டும் ,கோபம் ஆகட்டும், விரக்தி ஆகட்டும் இளையராஜா மனித உணர்வுகளை இசை மொழியாக வகுக்கும் விதமே அலாதி.அவரின் மிகுதியான உற்சாகத்தை வழங்கக் கூடிய பாடல்களிலும் மாலை இருட்டினை பேசும் தனிமையான சோக உணர்வினை வழங்கக்கூடிய இசையினை மெலிதாக கசிய விட்டிருப்பார்.

(தொடர்ந்து எழுதுவேன்...)