8/17/07
சேகுவேரா-என்ற கனவு மானுடன் -பாகம் 2
சேகுவேரா ஒரு மருத்துவர்..அவர் தன் நண்பர் அல்பெர்தோ கிரானடோ வோடு
தென் அமெரிக்க கண்டத்தின் பசிபிக் கரையோர நாடுகளை சுற்றிப் பார்க்கும்
எண்ணத்தோடு ஒரு பழைய மோட்டர் சைக்கிளில் செய்த பயணம் அவர் வாழ்நாளில் முக்கிய திருப்பமாகும்….
அப்பயணத்தில் ஒரு தொழுநோய் இல்லத்தில் சே-வும் அவரது நண்பரும் தங்கி இருந்து மனிதாபிமான உதவிகளை செய்தனர்..அப்போது அந்நோயாளிகளின் உடல் நலனை ஒரு மருத்துவர் என்ற முறையில் தேற்றியதோடு மற்றும் இல்லாமல் அவர்களின் மனநிலையையும் சே தன் சுயநலமற்ற அன்பினால் தேற்றினார்….
சே மற்றும் அல்பெர்தோ கிரானடோவின் நாட்குறிப்புகளை பயன் படுத்தி வால்டர் சாயேஸ் என்பவர் THE MOTOR CYCLE DIARIES என்ற உலகப் புகழ்ப் பெற்ற
படம் தயாரித்தார்..அந்தப் படத்தை நானும் பார்த்திருக்கிறேன்…..அற்புதமான ,இயற்கை சுழலில் படம் பிடிக்கப் அப்படம் காண்போரை நெகிழ்ச்செய்யும் அனுபவத்தை ஏற்படுத்தக்கூடியதாகும் .அல்பர்தோ கிரானாடோவின் பயணக்குறிப்புகள் தமிழில் ஜி.குப்புசாமி மொழிப் பெயர்ப்பில் ‘சேகுவேரா என்ற புரட்சிக்காரன் உருவான கதை’ என்ற தலைப்பில் புத்தகமாக வெளிவந்துள்ளது…..
(வ.உ.சி.பதிப்பகம் வெளியீடு விலை:ரூ.100/-)
சேகுவேரா ஒரு காவிய நாயகனுக்குரிய அம்சங்கள் அனைத்தையும் ஒருங்கே பெற்றிருந்தார்.அவரின் மிக கவர்ச்சியான முகம் ,கள்ளங்கபட மற்ற அவரின் பார்வை,நட்பை கொண்டாடும் அவரின் புன்னகை, இவை அனைத்துமே அவரின்
புகழை மேலும் உயர்த்தி சென்றன……
அது மட்டுமல்ல அவரின் சமரசம் ஏதும் அற்ற புரட்சிக்கர மனநிலை யாருக்கும்
கிடைப்பது அரிது…
ஒரு புரட்சிக்காரனின் தேவை என்ன என்பதை அவரே கீழ்கண்டவாறு தெரிவிக்கிறார்…..
“ஒரு புரட்சிக்காரனின் தேவை எதுவென்றால்
1.வெகு நடப்பதற்கும், ஒடுவதற்கும் ஏதுவான வலிமையான கால்கள்
2.தூக்கும் போது உறுத்தாத எளிய வாழ்விற்கு போதுமான, இன்றியமையாத
பொருட்களை உள்ளடக்கியதுமான சிறிய சுமை.............
3.சிறிதளவே சாப்பிட்டாலும் தாங்கும் பிச்சைக்காரனின் வயிறு….
இதைவிட யார் புரட்சிக்காரனின் தேவைகளை யார் சொல்லிவிட முடியும்?,,….
இதைவிட அவர் ஒரு நிரந்தர ஆஸ்துமா நோயாளி என்பதும் நம்மை ஆச்சர்யத்தில் ஆழ்த்துகிறது..தீவிர ஆஸ்துமா நோயின் தாக்குதலுக்கு உள்ளான அவர் அதே வேகத்தில் ஏகாதிபத்திய சக்திகளை தாக்கிகொண்டிருந்தார் என்பது மானுட சமூகம் மீது அவர் கொண்டிருந்த மாசற்ற அன்பையும்,போர் மனநிலையையும் ஒரே சமயத்தில் பெற்றிருந்தார் என்பது சிறப்பு…
(தொடரும்)
Labels:
உலக புரட்சியாளர்கள்...
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment