10/8/07

தோழர்.சேகுவேரா மீதான என் பற்று தொடர்கிறது..




தோழர்.சேகுவேரா மீதான என் பற்று தொடர்கிறது..

நான் பார்த்த அனைத்து மானுட வடிவங்களுக்கு அப்பாற்ப் பட்டவர் தோழர் சே..
ஈடு இணையற்ற தியாகமும் , கவர்ச்சி மிகுந்த சாகசங்களும் நிறைந்த அவரது வாழ்வு மற்ற புரட்சியாளர்களுக்கு வாய்ப்பது கடினம்...நமது இந்திய அரசியல் வரலாற்றில் பார்த்தோமானால் தோழர் மாவீரன் பகத்சிங்,சுபாஷ் சந்திர போஸ்,உத்தம் சிங், என்று சிலர் முகம் தெரிந்தாலும் சேகுவேரா மற்ற ஆளுமைகளோடு ஒப்பிடுகையில் ஏன் சிறந்து நிற்கிறார் என்றால் அவரது உலகம் தழுவிய பாசம்...

அர்ஜென்டினாவில் பிறந்து, கியூபா புரட்சியில் பங்கேற்று, காங்கோ காடுகளில் அலைந்து, பொலிவியா புரட்சியில் பங்கேற்று ,கடைசியில் வீர மரணம் எய்திய சேகுவேரா உள்ளம் முழுக்க கவிழ்ந்து கிடந்தது உலகளாவிய புரட்சி என்னும் கனன்று கொண்டிருந்த நெருப்பு ......

கியூப புரட்சியில் வென்ற போது சே கதாநாயகனாக வர்ணிக்கப் பட்டார். பிடல் காஸ்ட்ரோவோடு சேர்ந்து கியூபாவை செம்மை படுத்தும் பணியில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டார் சே....அப்போது சே நினைத்திருந்தால் சுதந்திர கியூபாவில் சகல அதிகாரங்களோடு சுக போக வாழ்க்கை நடத்தி இருக்கலாம்.ஆனால் சேவின் புரட்சி மனம் சும்மா இருந்ததா...? இல்லை.

சர்வாதிகார அமெரிக்காவிற்கு கடும் சவாலாக இருந்தார் தோழர் சே.....மற்ற நாடுகளை சுரண்டி வாழும் சர்வாதிகார அமெரிக்க மனப் பான்மைக்கு கடும் நெருக்கடியை தந்தார் தோழர் சே...அமெரிக்கா இதுவரை தன்னியல்புகளை மாற்றிக் கொள்ளவில்லை.ஆனால் அமெரிக்காவின் இளைய சமுதாயத்தினர் சேகுவேரா படம் பொறித்த சட்டைகளை அணிந்த்து திரிகின்றனர்.எதிரிக்கும் கூட உதாரணமாகிப் போன உத்தமர் தோழர் சே...

பிள்ளை பருவத்தில் தோற்றிய கடுமையான ஆஸ்துமா அவரை வாழ் நாட்கள் முழுக்க துரத்தியது.கடுமையான சுவாச கோளாறுகளால் அவரது உடல் நலம் பல நேரங்களில் குன்றிப் போனது...மேலும் பனாமா சுருட்டு ஆஸ்துமாவை தணிக்கும் என நம்பினார் அவர்...அதனால்தான் அவர் பெரும்பாலான நேரங்களில் சுருட்டோடு காணப் பட்டார்.அதுவே அவரது கவர்ச்சி மிகுந்த அடையாளமாய் மாறிப் போனது தனிக் கதை.....

09-10-07 தோழர் சேகுவேராவின் நினைவு தினம்...

தோழர் சேகுவேராவை இந்த நாளில் மட்டுமல்ல....எல்லா நாட்களிலும் அவரது நினைவுகளை நெஞ்சில் சுமப்போம்.....

செவ்வணக்கம்...

(தொடரும்)

No comments:

Post a Comment