5/20/08
அம்பேத்கார் பிறந்த நாள்..கனவும்..நினைவும்..
"நீங்கள் என்னுடைய வாழ்க்கையில் இருந்து கற்றுக் கொள்வதற்கு ஒரு பாடம் இருக்கிறது என்றால், அது என்னுடைய சமூகத்தை நான் ஒருபோதும் கைவிட்டதில்லை என்பதுதான். என்னுடைய வாழ்நாள் முழுவதும் அவர்களுடைய மகிழ்விலும், துயரத்திலும் பங்கேற்பதில் நான் பெருமை கொள்கிறேன்.''
- டாக்டர் அம்பேத்கர்.
பேரன்பிற்கும் ,பெருமதிப்பிற்கும் உடைய நீலப் புலிகள் சமூக இயக்கத்தின் தலைவர் அய்யா T.M.உமர் பாரூக் அவர்களே..,
நீலப் புலிகள் இயக்கத்தின் மாநிலத் தலைவர்.., என் அண்ணன் ,என் வழிகாட்டி, என் மண்ணின் மைந்தன் ..வழக்கறிஞர் இளங்கோவன் அவர்களே….
நீலப் புலிகள் இயக்கத்தின் நிர்வாகிகளே ….வழக்கறிஞர் உறவுகளே,,,,
பெரியோர்களே…அருமை தாய்மார்களே ..உங்கள் அனைவருக்கும் இந்த இனிய மாலை வேளையின் மகத்தான வணக்கங்களை,வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்…
ஒரு பொது உடைமை இயக்கத்துகாரான நான் இந்த மேடையில் மிகுந்த உரிமையோடு ஏறியுள்ளேன்….இந்த சமூகத்தில் புரையோடி போயிருக்கும் சாதி என்ற புற்று நோயை அழிக்க வல்ல அரு மருந்தென தோன்றியிருக்கும் எந்த ஒரு சமூக இயக்கமும் எங்கள் சகோதர இயக்கம் தான்.அந்த வகையில் நீலப் புலிகள் இயக்கத்தின் மீது என் அன்பை நான் இங்கு பதிவு செய்கிறேன்…
இதில் மற்றொரு முக்கிய விஷயம் அண்ணன் இளங்கோவன் ஆணையிட்டால் நான் எந்த மேடையானாலும் ஏற தயாராகி விடுவேன்…அது தூக்கு மேடையாக இருந்தாலும் கூட…..அந்த உரிமையில் …அந்த பற்றில் உங்களிடத்தில் என் அன்பை பகிர்ந்துக் கொள்ளவே இந்த மேடையிலே நான் ஏறியுள்ளேன்….
ஒரு மகத்தான ஒரு மனிதரை…உலகம் இது வரை பார்த்திராத, இனியும் பார்க்க துடிக்கின்ற ஒரு தலைவனின் நினைவுகளை,அவரது சிந்தனைகளை பகிர்ந்துக் கொள்ள நாம் இங்கு கூடியுள்ளோம்…
அண்ணல் அம்பேத்கார் என்பவர் ஒரு குறிப்பிட்ட வகுப்பினருக்கு, ஒரு குறிப்பிட்ட சாதியினருக்கு தலைவராக குறுக்கப் பட்டதில் இருந்தே நமக்கு வரலாற்றின் வஞ்சகம் தெளிவாக புரிகிறது.
தெற்கே தந்தை பெரியாரின் வீரமும்…வடக்கே அண்ணல் அம்பேத்காரின் தீரமும் இணையானவை……இருவரும் மிக நெருக்கமான கொள்கைகள் உடைய தலைவர்கள்.இந்து மதம் என்ற ஓரவஞ்சனை நிறைந்த கோட்டையை தகர்க்க பாடுபட்ட தளகர்த்தர்கள். கடைசி வரை ஒருவரை ஒருவர் எந்த சமயத்திலும் விட்டுக் கொடுத்து கொண்டவர்கள் இல்லை.
நான் இந்துவாக பிறந்து இருந்தாலும் நான் இந்துவாக சாக மாட்டேன் என்று சூளுரைத்தார் அண்ணல் அம்பேத்கார். உலகத்தில் இந்த இந்து மதம் போன்ற மோசடியான ,அயோக்கியத்தனமான மதம் வேறு எங்கும் இல்லை….ஊருக்கு ஊரு சாமி…ஊருக்கு ஊரு பழக்க வழக்கங்கள்..
தோழர்களே…இந்து மதம் கடவுளின் தலையிலே உதித்தவனாக வருணிக்கின்ற பார்ப்பனன் யாராவது தீ மிதிக்கிறானா…அலகு குத்துறானா…..காவடி எடுக்கிறானா ..இல்லை…இப்ப சித்திரை மாசம் வேற ..ஊருக்கு ஊரு திருவிழா..தெருவுக்கு தெரு ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்…..
இதுல நடக்குற ஒவ்வொரு சடங்கும் நாம தாழ்ந்தவனு நமக்கு நினைவூட்ட உண்டாக்கப் பட்டிருக்கு,,,,நல்லா சிந்திச்சி பாருங்க மக்களே…
ஏன் அய்யன் மாருங்க தீ மிதித்து ..அலகு குத்திக்க மாட்றான்…
சபரி மலைக்கு போற பசங்க நம்ம ஆளுங்கதானே..?
ஆனா பார்ப்பனர்கள் எல்லாம் கம்ப்யூட்டர் படிச்சிட்டு வெல் செட்டில்டா அமெரிக்காவில செட்டில் ஆயிட்டான்…
ஆனா நம்ம சனம் இந்த நூற்றாண்டிலும் சாதகம் பார்த்து ,அலகு குத்தி ,காவடி தூக்கிட்டு இருக்கு.
இந்த கொடுமை உலகுல எங்கும் நடக்கல…இந்த பைத்தியகாரத் தனம் தான் நம்மள காலம் காலமாய் அடிமை படுத்தி வைச்சிகிட்டு இருக்கு.
கோவில் கட்டியது யாரு..நாம…கல்லு சுமந்தது யாரு நம்ம முப்பாட்டான்…தேரு கட்டினது யாரு…நம்ம தாத்தன்…ஆனா கோவிலுக்குள்ள சாமிய தொட்டு பார்க்கறதுக்கு நமக்கு உரிமை கிடையாது.சாமி சிலைய செதுக்குனது கூட நம்ம ஆளுதான்..ஆனா பார்ப்பான் ஒரு குடம் தண்ணியை அந்த கல்லு மேல ஊத்திட்டு சுக்கிலா பிரதம் பாடிட்டு அது சாமியாயிடிச்சின்னு சொல்றான் …நம்ம ஆளும் அதை போயி கும்பிட்டுட்டு தட்டுல காசு போட்டுட்டு வர்றான்….
முதல்ல நாம சாதிய விட்டு வெளியேறுணும்னு நினைச்சா ..நாம இந்துங்கிற நினைப்பை அழிக்கணும்….இந்த நூற்றாண்டிலும் நம்ம நாட்டுல இரட்டை குவளை முறை இருக்கே தோழர்களே….பெரியார் திராவிட கழகம்னு ஒரு சமூக இயக்கம் ..இங்க நீலப் புலிகள் இயக்கம் போல…ஒரு இயக்கம் கோவை மாவட்டத்துல உள்ள டீக் கடைகளில் இரட்டை டம்ளர் முறை கடை பிடிக்கப் பட்டு வருதுன்னு கடை அட்ரஸோடு போட்டு இருக்காங்க…..என்ன நடவடிக்கை இந்த அரசாங்காத்தினால எடுக்க முடிஞ்சது…?
இன்னிக்கும் சாதிய நம்புறான்..அரசியலுக்கு..ஓட்டு வாங்குறதுக்கு சாதிய நம்புறான்……பகுத்தறிவு இயக்கம்னு சொல்லிக்கிற திராவிட கட்சிகள் கூட சாதிய நம்பித்தானே கட்சிய நடத்துது..?
இதை த்தான்..இந்த மோசடித்தனங்களை தான் அண்ணல் அம்பேத்கார் அன்று எதிர்த்தார்..உன்னை இழிவு செய்கிற எதையும் உன் வாழ்க்கையில அனுமதிக்காதே ன்னு அந்த தலைவர் சொன்னார்…
ஆனா யாரு கேட்டா…..யாரு கேட்டா மக்களே..யாரும் கேட்கல…….
எந்த வித அறிவியல் முன்னேற்றமும் இல்லாமல் இந்த நூற்றாண்டிலும் சாமியாருகிட்ட ஏமாந்துகிட்டு தானே மக்களே இருக்கோம்…..
இந்து மதம் தான் உன்னை அடிமைப் படுத்துது,,உன்னை இழிவுப் படுத்துது…நீ தாழ்த்தப் பட்டவனு வீட்டுக்குள்ள ,கோவில்குள்ள ,கடைக்குள்ள நுழைய விட மாட்டுது….அப்புறம் எந்த இழவுக்கு இந்த மதத்த பிடிச்சிகிட்டு நாம அழுவுணும்..?
வீட்டுக்கு வீடு அம்பேத்கார் படத்த,பெரியார் படத்த மாட்டி வைச்சிருந்தா மட்டும் போதாது….நம்மை இழிவு செய்யுற இந்து மதத்த விட்டு கொஞ்சம் கொஞ்சமா விலக ஆரம்பிக்கணும்….இந்து மதம் என்கிற மோசடி தகர்க்கப் பட்டால் ….சாதி வேறுபாடு..உயர்ந்தவன்..தாழ்ந்தவன் என்கிற அனைத்தும் அடிச்சி வீழ்த்தப் படும்…
அதைத்தான் அண்ணல் அம்பேத்கார் செய்தார்…தன்னை இழிவுப் படுத்தின மதத்தை விட்டு வெளியேறினார்….
தாழ்த்தப் பட்ட மக்களுக்கு தனி இட ஓதுக்கீடு ஆங்கில அரசு வழங்குவதை எதிர்த்து காந்தி அன்னிக்கு உண்ணா விரதம் இருந்தார்…அண்ணல் அம்பேத்கார் அவர்கிட்ட பேச்சுவார்த்தை நடத்துனாரு ….பேச்சு வார்த்தை தோல்வி…கோபமா வெளியே வந்த அம்பேத்கார நிருபர்கள் கேட்டாங்க….காந்தி இப்படி தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்தா செத்துடுவாரு……னு கேட்டாங்க..அதுக்கு அம்பேத்கார் ஒரு நல்ல விஷயத்துக்கு காந்தி தடையா இருக்குறத விட சாகலாம்னு துணிச்சலா சொன்னாரு,,,,,அதுதான் அம்பேத்கார்,,,எதிலும் ஒரு போர்க்குணம்…சமரசம் இல்லா மனநிலைன்னு வாழ்ந்தார்….
லட்சக் கணக்கான தலித் மக்களை அழைத்துக் கொண்டு புத்த மதத்தை அம்பேத்கார் தழுவிய போது சொன்ன வார்த்தை அப்பாடா …என் இழிவு நீங்கியதுனு…….எவ்வளவு சத்தியமான வார்த்தைகள்…
நான் இந்த கூட்டத்தின் வாயிலாக தெரிவித்துக் கொள்ள விரும்பும் செய்தி இதுதான்…
நாம இந்துவா இருக்கின்ற வரைக்கும் இந்த இழிவும் ..,இந்த மூடத்தனமும் ,இருக்கும்…முதல்ல நாம இந்து மத சடங்குகளை செய்யக் கூடாது…செஞ்சா நம்ம சாதியை நாம ஓத்துக்குறோம்னு அர்த்தம்
எனவே மக்களே அம்பேத்கார் நமக்கு விட்டு சென்ற பணிகளை தொடர்ந்து செய்வோம்…நம்மை பிடித்திருக்கும் சாதீய இழிவில் இருந்து தயங்காமல் வெளியேறுவோம்
நன்றி …வணக்கம்……….
Labels:
உலக புரட்சியாளர்கள்...
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment