5/20/08

பாரதி-இந்துத்வா வெறியரா..?


தோழர்களே...

பாரதி குறித்து நம் அருமை தோழர்.வே.மதிமாறன் அவர்கள் வலைப்பூவிலும் ,பாரதீய ஜனதா பார்ட்டி என்ற நூலிலும் பலவிதமான விமர்சனங்களை தொடர்ந்து வைத்து வருகிறார்.

திரு.வே.மதிமாறன் அவர்களுடைய விமர்சனம் பாரதி குறித்த சரியான பார்வையா என்பதில் எனக்கு கருத்து வேறுபாடுகள் உண்டு.எனவே பாரதி குறித்த தெளிவை நாம் ஏற்படுத்திக் கொள்ளுல் மிக அவசியமான ஒன்றாக நான் கருதுகிறேன்...

சூத்திரனுக்கு ஒரு நீதி,
தண்டச் சோறுண்ணும் பார்ப்புக்கு
வேறொரு நீதி என்று சாஸ்திரம்
சொல்லிடுமாயின் அது சாஸ்திரம்
அன்று சதி என்று கண்டோம்........

என்று பாடிய பாரதி சாதீய உணர்வாளரா என்பதே என் கேள்வி.....


பார்ப்பானை அய்யரென்ற காலமும் போச்சே..என்று பாடிய பாரதி ..தன் வாழுங்காலத்தில் அவர் சொந்த பந்தங்களால் எப்படிப்பட்ட எதிர்ப்புகளை சந்தித்தார்..?

அக்ராஹாரமே அந்த தனி மனிதனை ஒதுக்கியதே......

என்ன காரணம்...?

சாதியை மறுத்தான்..சமயத்தை வெறுத்தான்.....அந்த ஈரமுள்ள மனிதன்..

அல்லா...அல்லா..என்று அதனால்தான் அவனால் பாடவும் முடிந்தது.

பாரதி மீது விமர்சனம் வைப்பவர்கள் ஒரு முக்கிய விஷயத்தை மறந்து விடுகிறார்கள் அல்லது மறைத்து விடுகிறார்கள்.....அது பாரதி வாழ்ந்த காலம்....

பாரதி வாழ்ந்த காலக் கட்டத்தில் ஊரோடு ஒத்து வாழ்ந்து..சாதி சமயம் பேண முடியாமல் தத்தளித்த அந்த மனிதனின் நிலை கவனிக்கத் தக்கது....

எதற்காக பாரதி என்ற தனி மனிதனிக்கு .....அத்தனை இடைஞ்சல்கள்...?

சாஸ்திர சம்பிரதாயங்களுக்கு சாவுமணியாய் பாரதியை பழைமைவாதிகள் பார்த்தனர்....

உயர்ந்த குலம் என்று போற்றப் பட்ட ஒரு குலத்தில் பிறந்து, வைதீக ,வேத கேள்விகளில் மிளிர்ந்து ,அளப்பரிய கவிதை திறன் உடைய ஒரு மனிதன் சாதி மறுப்பாளனாக ஏன் வாழ வேண்டும் ..? என்ற கேள்வி மிக முக்கியமானது.

கொஞ்சம் விட்டுக் கொடுத்திருந்தால் பாரதிக்கு ராஜபோக வாழ்க்கை கிடைத்து இருக்குமே...?

அதானாலேயே அந்த மனிதன் அனாதையாய் செத்து போனானே...?

இது கவனித் தக்க வேண்டிய அம்சம் இல்லையா..?

ஓகேனக்கல் விஷயத்தில்.....கலைஞரின் சமரசம் ராஜதந்திரம் என்றால் ....

பாரதிக்கு ஏன் ராஜதந்திரம் இல்லாமல் போயிற்று,,,,?

ஒரு மனிதன் ஏன் அவ்வளவு சவால்களும்,இடைஞ்சல்களும் உடைய வாழ்வினை ஏன் தேர்ந்தெடுக்க வேண்டும்...?

இது தான் என் முதல் கேள்வி..

எனக்கென்ன சந்தேகம் என்றால் ...பாரதி வாழ்ந்த காலத்தில் அவனுள் ஏற்பட்ட மீறலால் விளைந்த சவால்கள் அதிகம் தானே..??

தமிழ் சமூகவியலில் பாரதியின் பங்கு அவரது குலம் சார்ந்த உணர்வை பிரதிபலிக்கிறதா...?

குறிப்பாக..பாரதி ஆரியன் என்று அழைக்கும் சொல் பார்ப்பனர்களை குறித்த சொல்லாடல் இல்லை என்ற சிந்தனை இருக்கிறது...

பிச்சை வாழ்வு உகந்து பிறருடைய ஆட்சியில்
அச்சம் உற்று இருப்போன் ஆரியன் அல்லன்.

மாட்சிதீர் மிலேச்சர் மனப்படி ஆளும்
ஆட்சியில் அடங்குவோன் ஆரியன் இல்லன்.

என்றும் பாரதி பாடுகிறார்.....

அப்படி என்றால் ஆரியர் என்ற சொல் பொதுமைத் தன்மை வாய்ந்ததாகவே பாரதி பயன் படுத்தி உள்ளார்.....

No comments:

Post a Comment